...Read More Events...

சகலகலா குடும்பம் -2015 - ஒரு பார்வை
             

அன்பான தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு வணக்கம்!

சென்ற 30/05/2015 சனிக்கிழமை அன்று மாலை 6.30மணிக்கு, ISC Multipurpose Hallல் வைத்து, அரங்கு நிறைந்த சங்க உறுப்பினர்களின் பலத்த ஆரவாரத்துடன் இனிதே துவங்கியது, நமது "சகலகலா குடும்பம்" நிகழ்ச்சி. இது குடும்ப உறவுகளை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு பொழுதுபோக்கு மனமகிழ் போட்டி நிகழ்ச்சி.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான, சங்க பொருளாளர் திருமதி. விஜயலக்சுமி (Vijayalakshmi) மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் திரு. மணிகண்டன் (Manikantan) ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கமாக , சங்க இலக்கிய செயலாளர் திருமதி. விசாலம் சுவாமிநாதன் (Visalam Swaminathan) அவர்களின் மேற்பார்வையில், சங்க தமிழ்வகுப்பு குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, பெரியவர் திரு. பீலி சிவம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

விளையாட்டுத்துறை செயலாளர் திரு. மணிகண்டன் (Manikantan) அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.

தலைவர் திரு. அபுல் ஹசன் (Abul Hasan) அவர்கள் தலைமையுரை மற்றும் சிறப்பு விருந்தினரான பெரியவர் திரு. பீலி சிவம் (Peeli Sivam)அவர்களைப்பற்றிய அறிமுக உரையும் வழங்கினார்கள்.

போட்டியாளர்களின் பதிவீட்டு (Registration) ஒழுங்கு முறைகளை, சங்க தகவல் தொடர்பு துறை செயலாளர் திரு. பஷீர். M. (Basheer. M)அவர்கள் கவனித்துக் கொண்டார்கள் .

மாலை 6.50 மணிக்கு போட்டி துவங்கியது. போட்டியில், ஒவ்வொரு குடும்ப அணியிலும் 4 பேர் அங்கம் வகித்து, தகுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 அணிகள் இடம் பெற்றன.

போட்டியின் நடுவர்களாக பெரியவர் திரு. பீலி சிவம் (Peeli Sivam), சங்கத்தின் முன்னாள் தலைவரும் மூத்த உறுப்பினருமான பெரியவர் திரு. ஸ்ரீநிவாச ராவ் (Srinivasa Rao), மற்றும் திருமதி. பத்மினி கிருஷ்ணமூர்த்தி (Padmini Krishnamoorthy) ஆகியோர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

போட்டியின் நடுவே, தலைவர் திரு. அபுல் ஹஸன் (Abul Hasan) அவர்கள், மஸ்கட் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட திரு. M.K.ஜானகி ராமன் (M.K.Janaki Raman) அவர்களை, சங்க உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். சங்கத்தின் ஆலோசகரான திரு. M.K.ஜானகி ராமன் (M.K.Janaki Raman) அவர்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர் மற்றும் துணைப் பொருளாளர், துறைவாரியான செயலாளர்கள் என 9 பேரையும், சங்க உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

தொடர்ந்து நடைபெற்ற போட்டி சரியாக இரவு 9.35 மணிக்கு முடிவடைந்தது .

சங்க விளையாட்டுத் துறை செயலாளர் திரு மணிகண்டன் (Manikantan) மற்றும் திரு. சந்திரசேகர் (Chandrasekar) ஆகியோர் போட்டியாளர்களின் மதிப்பெண் சார்ந்த சரியொப்பு கணக்கு ( Tally Sheet ) முறைகளை கவனித்துக் கொண்டார்கள்.

சங்க இலக்கிய செயலாளர் திருமதி. விசாலம் சுவாமிநாதன் (Visalam Swaminathan) அவர்கள் வந்திருந்தோர் அனைவருக்கும் நன்றி கூறினார்கள்.

சங்க பொதுச்செயலாளராகவும் இணைப் பொருளாளராகவும் விளங்கும் திரு. கர்ணன் (Karnan) அவர்கள் , அகில தொடர்பாட்டை நினைவகம் (USB - Flash Drive) மற்றும் வன்தட்டு நிலை நினைவகம் (Hard Disc drive) தகவல் வழியாக, மடிக்கணிணி (Laptop) உபயோகித்து, நிகழ்ச்சியின் இசை மற்றும் உரையாடல் சார்ந்த ஒலி நாடா அமைப்புகளை சீர்மைப்படுத்தும் பணியினை மேற்கொண்டார்கள் .

உள்ளரங்க சீரமைப்புப் பணியினை சங்கத்தின் துணைத்தலைவர் திரு. சீனிவாசன் (Srinivasan) அவர்கள் கவனித்துக் கொண்டார்கள்.

போட்டியில் கலந்துகொண்டவர்களை ஒழுங்குமுறைப்படுத்தி மேடையேற்றும் பணி மற்றும் சமயக் குறிப்பு முறைகளை, சங்கத்தின் மகளிரணிச் செயலாளர் திருமதி. சுஜீதா அசோகன் (Sujeetha Asokan) அவர்கள் கவனித்துக் கொண்டார்கள்

நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றிய பெரியவர் திரு. ஸ்ரீநிவாச ராவ் (Srinivasa Rao) அவர்களுக்கு சங்கத்தின் தலைவர் திரு. அபுல் ஹஸன் (Abul Hasan) அவர்கள் நினைவுப்பரிசு வழங்கி கௌரவப்படுத்தினார்கள்.

சிறப்பு விருந்தினரான பெரியவர் திரு. பீலி சிவம் (Peeli Sivam) அவர்களுக்கு சங்கத்தின் ஆலோசகர் திரு. M.K. ஜானகி ராமன் (M.K.Janaki Raman) அவர்கள் நினைவுப்பரிசு வழங்கி கௌரவப்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியின் நடுவராகப் பணியாற்றிய திருமதி. பத்மினி கிருஷ்ணமூர்த்தி (Padmini Krishnamoorthy) அவர்களுக்கு சிறப்பு விருந்தினரான பெரியவர் திரு. பீலி சிவம் (Peeli Sivam) அவர்கள் நினைவுப்பரிசு வழங்கி கௌரவப்படுத்தினார்கள்.

25/04/2015 அன்று நடைபெற்ற வண்ணக்கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களையும், மற்றும் இம்முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ் நிலை ஓட்டெடுப்பு (Online Voting) முறையில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களையும், கலைத்துறை மற்றும் குழந்தைகள் துறை செயலாளர் திரு. ஜவஹர் (Jawahar) அவர்கள் அறிவிக்க, சிறப்பு விருந்தினரான பெரியவர் திரு. பீலி சிவம் (Peeli Sivam) அவர்கள் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்கள்.

சகலகலா குடும்பம் நிகழ்ச்சி போட்டியின் இறுதி முடிவில், தரவரிசைப்படி வெற்றி பெற்றவர்களின் பெயர்களை, சங்க பொருளாளர் திருமதி. விஜயலக்சுமி ( Vijayalakshmi ) அவர்கள் அறிவிக்க, சிறப்பு விருந்தினரான பெரியவர் திரு. பீலி சிவம் (Peeli Sivam) அவர்கள் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்கள்.      

The final results are as follows:

I Place:

          Mr. SN Kannan & Family – VARNAJALAM

          Mr. Panneer Selvam & Family - Three point Five

II Place:

          
Mr. Karthikeyan & Family - Ilantalirgal

III Place:
          M
r. Ganesh Kumar & Family - Natpuk kudumbam

Consolation Prizes:

          Mr Aravind Kumar & Family - Kudumbam Oru Kadhambam

          Mr Sridhar & Family - Friends

          Mr. Ramesh & Family -
Kalakal Kudumbam


சங்க வரலாற்றில் முதல் முறையாக, சொந்த ஊர் மற்றும் வெளி நாடுகளில் வாழும் நம் உறவுகள் மற்றும் நண்பர்கள் கண்டுகளிக்கும் விதமாக, நேரடி ஒளிபரப்பு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. சங்க உறுப்பினர் திரு. ரத்தினகுமார் (Rathinakumar)அவர்கள் இம்முயற்சியை மேற்கொண்டார்கள்.

நிகழ்ச்சி இரவு 10.05 மணிக்கு இனிதே சுபமானது.


Our  Annual  Sponsors
                 

          Copy Right : Muscat Tamil Sangam @ 2015

Powered by Wild Apricot Membership Software