...Read More Events...

பூவையர் பூங்கா -2015 - ஒரு பார்வை
             

அன்பான தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு வணக்கம்!

05/06/2015 வெள்ளிக்கிழமை அன்று, காலை 9.30மணிக்கு, Wadi Kabir Crystal Suites Hotelல் வைத்து, அரங்கு நிறைந்த சங்க மகளிரின உறுப்பினர்களின் சந்தோச ஆரவாரத்துடன் இனிதே துவங்கியது, நமது "பூவைர் பூங்கா" நிகழ்ச்சி. மகளிர்க்கென்று ஒரு அரங்கம் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு பொழுதுபோக்கு மனமகிழ் போட்டிகள் நிறைந்த நிகழ்ச்சி இதுவென்றால் மிகையாகாது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான, சங்க பொருளாளர் திருமதி. விஜயலக்சுமி (Vijayalakshmi), மகளிரணிச் செயலாளர் திருமதி. சுஜீதா அசோகன் (Sujeetha Asokan) மற்றும் இலக்கிய செயலாளர் திருமதி. விசாலம் சுவாமிநாதன் (Visalam Swaminathan) ஆகியோர், நிகழ்ச்சியை முறைப்படி தொகுத்து வழங்கினார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக, திரைப்பட நட்சத்திரமான திருமதி. நளினி மற்றும் பிரபல புற்று நோய் மருத்துவ சிகிச்சை நிபுணர் திருமதி. டாக்டர் சுமனா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கமாக , சங்க இலக்கிய செயலாளர் திருமதி. விசாலம் சுவாமிநாதன் (Visalam Swaminathan) அவர்களின் மேற்பார்வையில், சங்க தமிழ்வகுப்பு ஆசிரியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள்.

தொடர்ந்து விளக்கேற்றும் வைபவம் நடந்தேறியது. சிறப்பு விருந்தினர்களான திருமதி. நளினி, திருமதி. டாக்டர் சுமனா மற்றும் வருடாந்திர அனுசரணையாளர் சார்பில் திருமதி. ஜோஸஃப் ஆகியோர் குத்து விளக்கேற்றிவைத்து நிகழ்ச்சிக்கு மெருகேற்றினார்கள்.

மகளிரணிச் செயலாளர் திருமதி. சுஜீதா அசோகன் (Sujeetha Asokan) அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.

தலைவர் திரு. அபுல் ஹசன் (Abul Hasan) அவர்கள் " பூ... வை! " என்று, கவிப்பாணியில் தலைமையுரையாற்றினார்கள்.

சிறப்பு விருந்தினர்களான திருமதி. நளினி மற்றும் திருமதி. டாக்டர். சுமனா ஆகியோரைப்பற்றிய ஒரு சிறப்பு காணொளி கண்ணோட்டம் ஒளிபரப்பப்பட்டு சிறப்பு விருந்தினர்கள் கெளரவிக்கப்பட்டார்கள். காணொளி வடிவமைப்புப்பணி திருமதி. தர்மாம்பாள் சீனிவாசன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

போட்டிகளின் முதற்கட்டமாக, மஸ்கட் மங்கை போட்டிக்காக, போட்டியாளர்கள் காலை 7.30 மணிக்கு தங்களை அலங்கரித்துக்கொள்ளத் துவங்கினார்கள். காலை 9.45 மணிக்கு தலைவரின் தலைமையுரையைத் தொடர்ந்து, மேடையில் மங்கையர்களின் காய்கறி கனி ஆடை அலங்கார அணிவகுப்பு துவங்கியது. போட்டியாளர்களின் வருகை குறிப்புணர்த்தி, அவர்களுக்கு ஏற்றவாறு ஒலியிசைப்பாடல் ஒலிக்கப்பட்டு, தாள நடையுடன் அவர்கள் மேடையேற்றப்பட்டார்கள் . திருமதி. பாரதி மணிகண்டன் மற்றும் திருமதி. சத்யா ஜவஹர் ஆகியோர், இதற்கான ஒலியிசைப்பாடல்களைத் தொகுத்து, மடிக்கணிணி துணையுடன் ஒலிபரப்பினார்கள் . சிறப்பு விருந்தினர்களான திருமதி. நளினி மற்றும் திருமதி. டாக்டர். சுமனா ஆகியோர் நடுவர்களாக அமர்ந்து சிறப்பித்தார்கள். "மஸ்கட் மங்கை" கிரீடமும் பட்டயமும், சிறப்பு விருந்தினர்களால் வெற்றி பெற்றவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.

பதிவீட்டு (Registration) ஒழுங்கு முறைகளை, தன்னார்வ மகளிரணியினர் கவனித்துக்கொண்டார்கள்.

"CONNEXION" என்ற புதுமைப் போட்டியொன்று, பொருளாளர் திருமதி. விஜயலக்சுமி (Vijayalakshmi) அவர்களின் கண்காணிப்பு பொறுப்பில் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆசுவாசப்படுத்திக் கொள்ளுவதற்காக இடையிடையே தேனீரும் மெல்லுணவும் வழங்கப்பட்டது.

"வனிதையுடன் வார்த்தை விளையாட்டு" என்ற ஒரு புதுமை நிகழ்ச்சி, இலக்கிய செயலாளர் திருமதி. விசாலம் சுவாமிநாதன் (Visalam Swaminathan) அவர்களால் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் உடையலங்காரப்போட்டியில் கலந்துகொண்ட பெண்களிலிருந்து ஒருவர், நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, "Best Dress Lady Award" விருது வழங்கி கெளரவப்படுத்தப்பட்டார்.

இவ்வகையான போட்டிகள் நடைபெற்ற அதே வேளையில், மற்றொருபுறம் மருதாணி இடுதல் (Henna), சிகையலங்காரம் (Hair Dressing), பயனிலா பொருளிலிருந்து மிகச்சிறந்த உருவாக்கம் (Best Out of Waste) மற்றும் கனி காய்கறி குரைவு (Fruits and Vegetable Carving) போன்ற பல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனி பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டிளின் நடுவர்களாக திருமதி. ஷாஹிதா அன்வர் (Shahida Anwar), திருமதி. உஷா முத்துக்குமார் (Usha Muthukumar), திருமதி. ஹேமா கண்ணன் (Hema Kannan), மற்றும் திருமதி. பாகியலக்ஷ்மி ராஜ்குமார் (Bhagyalakshmi RajKumar) ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

போட்டிகளின் நடுநடுவே, பார்வையாளர்களாக வந்திருந்தவர்கள், "பெயர் தாங்கிய சீட்டுக்குலுக்கல்" (Draw) முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மேடையேற்றி, தனித்திறன் போட்டி மூலமாக அவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

"சுய எடுத்தூண்" (Buffet) முறையில் சைவ மதிய உணவு, வந்திருந்தோர் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

மதிய உணவுக்குப்பின் துவங்கியது நடனப்போட்டி. இதன் நடுவர்களாக சிறப்பு விருந்தினர்கள் பங்காற்றினார்கள். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள்.

தொடர்ந்து, திருமதி. டாக்டர். சுமனா அவர்கள், புற்று நோய் பற்றிய ஒரு சிறப்பு விழிப்புணர்வு விரிவுரை கருத்தரங்கையும், உறுப்பினர்களின் தனிப்பட்ட மருத்துவரீதியான சந்தேகங்களுக்கு தீர்வுதரும் அடிப்படை விளக்கங்களையும், திரைப்பட உருப்படிவுக்கருவி (Projector) துணையுடன், மிகவும் சிறந்ததொரு முறையில் எடுத்துச் சொல்லி, நிகழ்ச்சியை மேலும் சிறப்புபடுத்தினார்கள்.

மாலைத் தேனீர் வேளைக்குப்பிறகு நிகழ்ச்சி மீண்டும் தொடர்ந்து நடந்தேறியது.

சங்க இலக்கிய செயலாளர் திருமதி. விசாலம் சுவாமிநாதன் (Visalam Swaminathan) அவர்கள், வந்திருந்தோர் அனைவருக்கும் நன்றி கூற, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள்.

பரிசுகள் சீரமைப்புப்பணிகளை திருமதி. ஜானகி கர்ணன் மற்றும் திருமதி. நஸீமா ஹஸன் ஆகியோர் கவனித்துக்கொண்டார்கள்.

நடந்து முடிந்த சகலாகலா குடும்ப நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டியில், பராசக்தி திரைப்பட வசனங்களை மனனம் செய்து ஒப்புவித்து, ஒட்டுமொத்த பார்வையாளர்களாலும் பாராட்டப்பெற்ற சிறுவன் செல்வன். ரிஷி பிரகாஷ் க்கும் சிறப்புப்பரிசாக மடிக்கணிணியொன்று சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.

The final results are as follows:
Muscat Mangai:

                I Place: Ms Kannathaal Lakshmanan & Ms Amutha Marthandan

               II Place: Ms Meena Manikandan & Ms Asha Mahesh

              III Place: Ms Akila Prakash & Ms Uma Jayaraj

Consolation Prize:
                Ms Priyadarshini Nagarajan & Ms Vijayalakshmi Harikrishnan

               Ms Nithya Mohan Kumar & Sangeetha Maran
               Ms Radhika Harish & Ms Saradha Seetharaman

Vanithaiyudan Varthai Vilaiyattu:
                I Place: Ms Anushiya Thiruvengadam & Ms Krithiga Siva Kumar

               II Place: Ms Vijaya & Ms Gayathri

              III Place: Ms Anuradha Karunakaran & Ms Lakshmi Raghuraman

Connexxion:
                I Place: Ms Bhuvana Tirupathi &  Ms Lakshmi Seshadri

               II Place: Ms Aruna & Ms Aarthi

 Best Dressed Lady:
                  I Place: Ms Subhashree
                 II Place: Ms Bhibhasha & Ms Shanthi

                III Place: Ms Rukmini & Ms Selvi

Best Out of Waste:
                  I Place: Ms Amutha Sandesh Kumar & Ms Anitha Dinesh
               II Place: Ms Padmini Suresh & Ms Dhanalakshmi Raja

             III Place: Ms Aruna Devi Suresh & Ms Meena Palaniappan

Jury Award:
                Ms Abirami Chokkalingam & Ms Sasi Suresh

               Ms Priya Jevadasan & Ms Subashini Sivakumar      

Vegetable Carving:
                  I Place: Ms Krithiga Sivakumar & Ms Anushiya Thiruvengadam
                 II Place: Ms Sridevi Parthasarathy & Ms ShenbahaDevi Dhanasekara Pandian

               III Place: Ms Hasleena Anwar & Ms Sabeena Ibrahim
        

Jury Award:
                Ms Sowmya Rajkrishna & Ms Rajam Kabali

               Ms Shanthi Shanmuga sundaram & Ms Kalpana Amal Narasimhan

Henna:
                  I Place: Ms Vijayalakshmi & Pushkala
                 II Place: Ms Ranjani Barani & Ms Geetha Vaidhi

               III Place: Ms Uma Devi & Ms Senthamizh
        

Jury Award:
                Ms Shaima Irsath & Ms Hanisha Salam

               Ms Nilofer Banu & Ms Selvi Swaminathan     

Hair Dressing:
                  I Place: Ms Sangeetha Maran & Ms Purnima
               II Place: Ms Rama Sundarrajan & Ms Brindha Raghavan

             III Place: Ms Gayathri & Ms Kasthuri

Group Dance:
                  I Place: Ms Kamala Subalakshmi, Ms Aruna Ganesh & Ms Bhavani Punithan
                 II Place: Ms Revathi Soundar Ms Suchithra Dinesh Kumar

               III Place: Ms Kavitha Muralidharan, Ms Indira Veeramani, Ms Sridevi Parthasarathy & Ms Maya Sridhar
      
       
Consolation Prize:

                Ms Anupama Gridharan & Ms Ramya Rajesekar

 

பிரிந்துசெல்ல மனமில்லா பூவையர் கூட்டம் சிறிது சிறிதாக விடைபெற, சரியாக மாலை 5.30 மணியளவில் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

Our  Annual  Sponsors
                   

          Copy Right : Muscat Tamil Sangam @ 2015

Powered by Wild Apricot Membership Software