...Read More Events...

இசையோடு இசைந்தாடு - 2015 - ஒரு பார்வை
             

அன்பான தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு வணக்கம்!

23/10/2015 வெள்ளிக்கிழமை.....

மஸ்கட் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து, Silver Ring International LLC வழங்கிய​, ஏறக்குறைய 7000 பார்வையாளர்களால், Muscat City Amphitheatre அரங்கமே நிரம்பி வழிந்து, வெற்றியை வெளிச்சம்போட்டு காட்டிய,

"இசையோடு இசைந்தாடு"

இன்னிசை நிகழ்ச்சி, மஸ்கட் தமிழ்ச்சங்க வரலாற்றில் ஒரு முத்திரையை பதித்தது என்றால் அது மிகையாகாது.

மாலை 4.30 மணியிலிருந்தே அலையலையாய் பார்வையாளர் கூட்டம். "படரொளி வெளியீட்டு உபயக்கருவி" ( LED ) திரை வாயிலாக​, மஸ்கட் தமிழ்ச்சங்கம் கடந்து வந்த வரலாற்றுப் பாதை மற்றும் முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் A P J அப்துல் கலாம் பற்றிய காணொளிகள் ஒளி பரப்பப்பட்டன.

சரியாக 6.00 மணிக்கு "படரொளி வெளியீட்டு உபயக்கருவி" ( LED ) திரையில், இறங்குமுகக்​ கணிப்பு (COUNT-DOWN) முறையில், திரைவாண வேடிக்கையுடன் நிகழ்ச்சிக்கு அச்சாரம் இடப்பட்டது.

மஸ்கட் தமிழ்ச்சங்க இலக்கிய செயலாளினி, திருமதி. விசாலம் சுவாமிநாதன் அவர்கள் "நிகழ்ச்சியரங்க தொகுப்பாளினி" (Comperer) யாக செயல்பட்டார்கள் .

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை மஸ்கட் தமிழ்ச்சங்க தமிழ் ஆசிரியைகள் சிறப்பாகப் பாட, நிகழ்ச்சி தொடங்கியது.

மஸ்கட் தமிழ்ச்சங்க பொருளாளினி, திருமதி. விஜயலட்சுமி சந்திரசேகர் அவர்கள் வரவேற்புரை வழங்க, மஸ்கட் தமிழ்ச்சங்க தலைவர் திரு. அபுல் ஹஸன் அவர்கள் தலைமையுரையாற்றினார்கள்.

தொடர்ந்து தமிழை வணங்கி இன்னிசை நிகழ்ச்சி தொடங்கியது.

திரு. சீனிவாசன், திருமதி. மகதி, திரு. வேல்முருகன், திரு. சத்யபிரகாஷ் மற்றும் அனிதா இவர்களுடைய பின்னணி இசையுடன் , லஷ்மன் ஸ்ருதி இசைக் குழுவினரின் இன்னிசைப் பயணம் இனிதே தொடர்ந்தது. இன்னிசை நிகழ்ச்சியின் "காட்சியரங்க தொகுப்பாளினி"(Anchor)யாக விஜய் தொலைக்காட்சி புகழ் M/s ரம்யா அவர்கள் செயல்பட்டார்கள்.

திருமதி. வாணி ஜெயராம் அவர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியின் தொடக்கமாக, அவர்களைப் பற்றிய​ சிறப்பு காணொளி ஒளிபரப்பப்பட்டது.

மஸ்கட் தமிழ்ச் சங்க​ நிர்வாகிகள் மற்றும் முன்ன​ணி பின்ன​ணி பாடகர்கள், இசைக்கலைஞர்கள் வாழ்த்தொலி முழங்க,​ மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் கௌரவ​ ஆலோசகர் திரு. ஜானகி ராமன் அவர்கள், நிகழ்ச்சியின் நடுநாயகமாக​ வீற்றிருந்த,​ கலைமாமணி திருமதி. வாணி ஜெயராம் அவர்களை, நிகழ்ச்சி அரங்க​ மேடைக்கு அழைத்துவந்தார்கள்.​ மஸ்கட் தமிழ்ச் சங்கத்திற்கான​ ISC கண்காணிப்பாளர் திரு.விநோத் நாயர் அவர்கள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்க,​ நிகழ்ச்சியின் அன்பளிப்பாளர் (Presenter) திரு. ஜோஸஃப் அவர்கள்கலைமாமணி திருமதி. வாணி ஜெயராம் அவர்களுக்கு"வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கி கௌரவப்படுத்தினார்கள்.

மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் கௌரவ​ ஆலோசகர் திரு ஜானகி ராமன் அவர்களின் சமூக​ சேவையை பாராட்டி,

"சமூகநல​ அறநெறிக் காவலர்" பட்டத்தினை கலைமாமணி திருமதி வாணி ஜெயராம் அவர்கள் திரு ஜானகி ராமன் அவர்களுக்கு வழங்கி கௌரவப்படுத்தினார்கள்.

"மல்லிகை என் மன்னன் மயங்கும்" என்ற​ பாடலைத் தொடர்ந்து, திருமதி வாணி ஜெயராம் அவர்கள், தான் பாடிய​ பல​ பாடல்களை தொகுத் து, ஒரு கதம்பமாலை (Medley)யை உருவாக்கி, தன் வசீகர குரலால் பாடி, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்கள் .

மெல்லிசை மன்னர் M S விஸ்வநாதன் அவர்களை நினைவுகூரும் வகையில், M S V பற்றிய​ சிறப்பு காணொளியும் ஒளிபரப்பப்பட்டது.

விஜய் தொலைக்காட்சி புகழ் "சிரிச்சா போச்சு" குழுவினரான​

திரு. பாலாஜி, ​ திரு. ஜெயச்சந்திரன், ​ திரு. பழநி பட்டாளம் ஆகியோரின் நகைச் சுவை காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக​ கவர்ந்தது

நிகழ்ச்சியின் நன்றியுரையை மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் திரு. சீனிவாசன் அவர்கள் வழங்கினார்கள்.

அரங்கம் முழுவதும் பரவலாக சீறிப்பாய்ந்து தொடர்ந்த இசைவெள்ளமும் நகைச்சுவையும், இரவு 10.45 மணியளவில் பலத்த கரகோசத்துடன் இனிதே நிறைவுபெற்றது.

  
  
  
  
  


Our  Annual  Sponsors
                   

          Copy Right : Muscat Tamil Sangam @ 2015

Powered by Wild Apricot Membership Software