Message from Convener

Jawahar.C

அன்பிற்கினிய தமிழ் சங்க உறுப்பினர்களுக்கு, என்றும் நலமே விளைக! வணக்கமும்! வாழ்த்துகளும்!

ம‌ஸ்க‌ட் தமிழ்ச் சங்கத்திற்கு உங்களை வரவேற்பதில் எண்ணற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!

 நம் மஸ்கட் தமிழ்ச் சங்கம் (Indian social club Oman -Tamil Wing ) மஸ்கட்டில் வசிக்கும் தமிழ் சமுதாய சங்க உறுப்பினர்களுக்காக ,பற்பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். குழந்தைகளுக்கான போட்டி நிகழ்ச்சிகளும், கலந்துரையாடல்களும், பட்டிமன்றங்களும், அறிவு சார் போட்டிகளும் , திறன் வளர்க்கும் போட்டிகளும், குடும்பத்துடன் பங்கேற்கும் மனமகிழ் நிகழ்ச்சிகளும், தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

இந்தப் பெருந்தொற்று காலத்திலும்கூட இணைய வாயிலாக எண்ணற்ற போட்டிகளையும் , நிகழ்ச்சிகளையும், யோகாசனம், கலை சார்ந்த பயிற்சிகளும், களம் சார்ந்த பயிற்சிகளும், புதிய வகையில், புதிய முயற்சியோடு, இணைய வழியில் , அனைவரும் பங்கேற்கும் வகையில் நடத்த திட்டமிட்டுள்ளோம் !

அனைத்து வகை நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் நம் தாய் தமிழை தாங்கிப் பிடிக்கும் படி நிகழ்ச்சிகளை அமைப்போம் வழங்குவோம்.

எமக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் எம் மஸ்கட் மக்கள், இந்தப் பொல்லா பெரும் தொற்று  காலத்தில், மஸ்கட்டில் தம்மால் இயன்ற அளவு பொருளுதவி செய்தவர்களுக்கும், அதை வேண்டுவோர்க்கு, சென்றடைய, கொண்டு சென்ற நம் தன்னார்வ தொண்டர் படைக்கும்!அவர்களுடன் சேர்ந்து, என்னுடன் சேவையாற்ற உள்ள முன்னாள், இந்நாள் நிர்வாகக்குழு உறுப்பினர் பெருமக்களுக்கும், என்னுடைய நன்றிகளையும் வாழ்த்துக்களையும் உளமார கூறுகிறேன்!

சொந்தங்களையும் உறவுகளையும் அவர் தம்மின் சடங்குகளிலும் பங்கு கொள்ள முடியாமல் தவிக்கும் நமது உறவுகளுக்கு, தேவையான மன மகிழ்வு அளிக்கும், சந்தோச தருணங்களை உண்டாக்கித் தர காத்திருக்கிறோம்! வருக! வருக!