StressManagement BridgeToSuccess SangeedhaSwarangal KanmaniPoonga

இலக்கிய மற்றும் கலாச்சார பிரிவு

தமிழன்னையின் ஆசிகளோடும் இயல் இசை நாடகம் என்ற முப்பெரும் தூண்களின் துணையோடும் நம் இலக்கிய நிகழ்வுகள்! அவற்றில் முதன்மையும் முத்தாய்ப்புமாக முத்தமிழ் அரங்கம். இதில் இயல் வடிவங்களான கவிதை, கதை, விடுகதை,பேச்சு மற்றும் பட்டிமன்றம், நம் சங்கம் மிகச்சிறப்பாக நடத்தி வருகிறது. மேலும் இசை வடிவங்களான பாடல் நடனம் இசைக்கருவிகள் வாசித்தல் போன்ற கலைநயம் மிக்க நிகழ்ச்சிகளும், நாடக வடிவங்களான ஓரங்க நாடகம், தனி நடிப்பு, நாடகங்கள், குறும்படம் ஆகிய நிகழ்ச்சிகளை பெருமையுடன் வழங்கி வருகிறது. அதோடு மட்டுமல்ல தமிழர் கலாச்சார நிகழ்வுகளான உரியடி, கயிறு இழுத்தல், மேலும் கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்றவை வெகுவிமரிசையாக ஆண்டுதோறும் நடைபெறும்.
Explore More

பெண்கள் பிரிவு

புலியை முறத்தால் விரட்டிய வீரப்பரம்பரையை சேர்ந்தவர்கள் அக்காலப் பெண்கள்.சேற்றிலும் ஆணுக்கு நிகராய் கால்பதித்து செந்நெல் மணிகளை உருவாக்கினர்.இந்த புதிய உலகத்தில் சமுதாயத்தில் பெண்களின் பங்கு என்ன? என்ற சிந்தனை வினாவுக்கு விடை அளிக்க மஸ்கட் தமிழ்ச் சங்கம் உருவாக்கியது தான் மகளிர் கிளை.

அண்மை நிகழ்வுகள் - மகளிரின் திறன்களை வளர்க்கும் பொருட்டு மஸ்கட் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்பட்ட நிகழ்வுகள்
சொல்லரங்கம்
கோலப்போட்டி
நடனப்போட்டி
மாறுவேடப்போட்டி
பாட்டு போட்டி
Explore More

குழந்தைகள் பிரிவு

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு..
எனும் வள்ளுவரின் கூற்றையும், ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியின் வரிகளையும் சிரம் ஏற்று நம் பிள்ளைகளை ஊக்குவிக்கும் விதமாக
தமிழ் வழிக் கல்வி,
விளையாட்டு,
நடனம்,
சிலம்பம்,
பேச்சு,
மற்றும் பாட்டுப்போட்டி
போன்ற நமது கலாச்சார கலைகளை செவ்வனே அளித்துவரும் மஸ்கட் தமிழ்ச் சங்கம்
Explore More

நூலகம்

தமிழ் நாவல்கள், படைப்புக்கள், புதினங்கள் மற்றும் காவியங்கள் கொண்ட தமிழ் நூலகம் ஒன்றினை ஐ எஸ் எம் கல்விக்கூடத்தில் நடத்தி வருகின்றோம். இந்த நூலகம் நம் உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் பிரதி வெள்ளி தோறும் காலை 9:00 am மணி முதல் 10:30 am மணி வரை செயல்படும். இந்நூலகத்தினை நம் உறுப்பினர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம். தவிரவும், பிற உறுப்பினர்கள் பயன்பாடு கருதி, நூல்களை நன்கொடையாக வழங்கிடுமாறும் அன்புடன் வேண்டுகிறோம்.

We run a Library which consists of Tamil books, novels, epics etc., at the Indian School Muscat Premises. The library is open for our Members between 09:00 am and 10:30 am every Friday. All the Members are cordially invited to make use of the Library. Also, we request our Members to donate books to the Library for the benefit of other Tamil Sangam Members.
Explore More

விளையாட்டுகள்

எங்கள் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்காக நாங்கள் அவ்வப்போது விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்கிறோம்.

இதில் ஷட்டில் பேட்மிண்டன், கேரம் போர்டு, செஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

வேடிக்கையும் உற்சாகமும் நிறைந்த ஒரு 'புதையல் வேட்டை' நிகழ்வை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்!
Explore More