தமிழன்னையின் ஆசிகளோடும் இயல் இசை நாடகம் என்ற முப்பெரும் தூண்களின் துணையோடும் நம் இலக்கிய நிகழ்வுகள்! அவற்றில் முதன்மையும் முத்தாய்ப்புமாக முத்தமிழ் அரங்கம். இதில் இயல் வடிவங்களான கவிதை, கதை, விடுகதை,பேச்சு மற்றும் பட்டிமன்றம், நம் சங்கம் மிகச்சிறப்பாக நடத்தி வருகிறது. மேலும் இசை வடிவங்களான பாடல் நடனம் இசைக்கருவிகள் வாசித்தல் போன்ற கலைநயம் மிக்க நிகழ்ச்சிகளும், நாடக வடிவங்களான ஓரங்க நாடகம், தனி நடிப்பு, நாடகங்கள், குறும்படம் ஆகிய நிகழ்ச்சிகளை பெருமையுடன் வழங்கி வருகிறது. அதோடு மட்டுமல்ல தமிழர் கலாச்சார நிகழ்வுகளான உரியடி, கயிறு இழுத்தல், மேலும் கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்றவை வெகுவிமரிசையாக ஆண்டுதோறும் நடைபெறும்.