YEAR : 2025-2027
Please find the results of Tamil Wing Management Committee Election that was held on 14-Feb-2025 at Indian Social Club TT Hall from 3pm to 7pm. The top nine candidates will form the next Management Committee for April 2025 to March 2027. Congratulations to all winners.
We appreciate all the efforts by all the contestants.
The top 9 candidates will be elected as Executive Committee members for the year April 2025 to March 2027.
I would like to place my sincere Thanks to all members for providing our team an oppurtunity to serve the Muscat Tamil Community for the past two years. Also, I would thank you all for your great support and active participation in all our programs for past two years, due to which we have successfully completed many programs including 3 mega events. Together with you, we are glad to welcome the New Management Committee of Tamil Wing for the year 2025 - 2027. Please find the portfolio's of the new Committee and together with you, I'm wishing the new team for a successful tenure and to take Tamil Wing to new heights.
மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் மாணிக்க விழா நிகழ்ச்சிகளை சென்ற வருடம் முழுவதும் நாம் பல்வேறு வகைகளில் கொண்டாடி மகிழ்ந்தோம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று மெகா நிகழ்வுகளை இணைந்து நடத்தியதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது பல்வேறு மொழிவாரிய சங்கங்களுக்கு மத்தியிலே, மஸ்கட் தமிழ்ச்சங்கம் ஒற்றுமையின் சின்னமாய் நிகழ்ச்சிகள் வழங்குவதில் முன்னோடியாய், மக்களுக்கான உதவிகள் புரிவதில் முதன்மையாய் என்றும் முதலிடத்தில் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2023-2024 ஆண்டின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நமது தமிழ் சங்கத்திற்கு ஆதரவளித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது வெற்றி நிகழ்ச்சிகளுக்கு அடித்தளமாய் நிற்கும் நமது சங்கத்தின் அணுசரணையாளர்களுக்கு எனது பணிவான நன்றிகள். நமது தமிழ் சங்கத்தின் வளர்ச்சிக்கு காரணமாய் இருந்த அனைத்து மேனாள் தலைவர்களுக்கும், நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் எனது சார்பாக உளம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் காணிக்கை ஆக்குகின்றேன். இதே போன்ற ஒற்றுமையுடன் பல்லாண்டுகள் வெற்றிப் பாதையில் மஸ்கட் தமிழ்ச் சங்கம் பயணிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
நமது மஸ்கட் தமிழ் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த நாம் கடந்த ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம் அதன் பலனாக இந்த ஆண்டு நமது சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதை தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த 2025 ஆம் ஆண்டு முடிவதற்குள் நம் உறுப்பினர் எண்ணிக்கையை 500 ஆக ஆக்குவதற்கு புதிய கமிட்டி தீவிர முயற்சி செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த இரண்டு வருடங்களாக என்னுடன் பயணித்த என்னுடைய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும், தன்னார்வத் தொண்டர் குழுவினருக்கும், என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக மஸ்கட் தமிழ் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் பணியாற்ற என்னைத் தேர்ந்தெடுத்த நமது உறுப்பினர்கள் உங்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Kind Regards,
Vijaya Saravanan.S
Honorary Convener
ISC-Tamil Wing
YEAR : 2023-2025
Elections for Tamil Wing Executive Committee was conducted by ISC on 11-Mar-2023 at ISC multi-purpose hall from 10am to 2pm.
We appreciate all the efforts by all the contestants.
The top 9 candidates will be elected as Executive Committee members for the year March-2023 to March-2025.
2024 நிகழ்ச்சிகள்/நிகழ்வுகளில் பங்கேற்பது 2024 இல் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும்.
2021-2023 செயற்குழு உறுப்பினர் குழுவில் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய 8 உறுப்பினர்களுக்கும் உங்கள் சார்பாக என் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். மேலும் ,என்னை செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 13 வருடங்களுக்கு மேலாக எனக்கு ஆதரவு அளித்து, என்னை மீண்டும், மீண்டும் தேர்ந்தெடுத்த நேற்றைய இன்றைய சங்க உறுப்பினர்கள் மற்றும் ,என்னுடன் பணியாற்றிய முன்னாள் ,இன்னாள், செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் என் சார்பாகவும் என் குடும்பம் சார்பாக என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் . எனக்கு நீங்கள் அளித்த இந்த வாய்ப்பிற்கு உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அனைவரும் இன்புற்று இருக்க வேண்டும் என்பது என் அவா.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" வாருங்கள் தோழர்களே!
உளம் மகிழ மஸ்கட் மண்ணில் வாழ்ந்து களிப்போம்!
அன்புடன்,
சொ. ஜவஹர்
தலைவர்
ISC-மஸ்கட் தமிழ்ச் சங்கம்