ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
குறள் எண் - 33
பொருள் :
இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.
அன்பிற்கினிய தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் !!!
இயல் , இசை , நாடகத்தை நம் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பங்களிப்போடு ஓர் பிரம்மாண்ட மேடையில் அரங்கேற்றி மகிழ்ச்சிக் கொண்டாட்டமாக மாற்ற வேண்டுகிறோம்…
ஆம், வருகிற
மே மாதம் 9ம் தேதி வெள்ளிக்கிழமை
“முத்தமிழ் விழா“
காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
உங்களுக்காக , உறுப்பினர்களின் திறனால் மிளிரவிருக்கும் கலைநிகழ்ச்சிகள்…
மிருதங்கம் வரவேற்க !
வீணையின் இசையோடு !
பரதநாட்டிய கலைஞர்கள் மெய்சிலிர்க்க வைக்க !
பறையாட்டம் !
கரகாட்டம் !
சிலம்பாட்டம் !
காவடியாட்டம் !
திரை இசை ஆடல்! பாடல் !
வில்லிசை !
குறு நாடகங்கள் !
தமிழ் சார்ந்த பயணமாக 5 வயதுக்குழந்தை முதல் 50 வயதானவர்களும் தங்களின் திறமைகளைக் கொண்டு மிகப் பெரிய மேடையில் கலந்து கொண்டு சிறப்பிக்க வரவேற்கிறோம்…
ஒரே நாளில் இத்தனை நிகழ்வுகளுமா ? என்று தாங்கள் ஆச்சரியப்படுவதை நாம் அறிவோம்…
இவை அனைத்தையும் நம் மஸ்கட் தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் நண்பர்கள் (நம் உறுப்பினர்கள்) இணைந்து பங்களிக்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவை அனைத்தும் போட்டியல்ல நம் அனைவரின் திறமைகளை வெளிக்கொணரும் பிரம்மாண்ட மேடை…
கண்களுக்கும் செவிகளுக்கும் உணவில்லாத போது அறுசுவை மதிய உணவோடும் மாலைச் சிற்றுண்டியோடு நிகழ்ச்சியை ரசித்து ருசிக்க வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்!!!
நிகழ்ச்சியில் பங்கேற்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி ஏதேனும் இரண்டு கலைநிகழ்ச்சிகளில் மட்டுமே பதிவு செய்யும்படி தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்!!!